மின் கட்டண உயர்வு:
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறான காலநிலையால் மின் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீட்டு மின் இணைப்பு, தொழில்துறை மின் இணைப்புக்கான மின் கட்டணத்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் ஆண்டுதோறும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை, மின்வாரியத்துறை உயர்த்தி வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான மின் கட்டண உயர்வு, இம்மாதம் (ஜூலை) மின்வாரியம் அமல்படுத்தலாம் என வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே தொழில்துறை நிறுவனங்கள் தத்தளித்து வருவதால், மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பல அமைப்புகளும் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.