ரேஷன் கடைக்கு முன் இதை செய்ய மறக்காதீங்க?
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கி வந்தாலும், ஒரு சில நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இல்லை என நுகர்வோர்களை அலைய வைத்த வண்ணம் உள்ளனர். அதேபோல் ஒரு சில நேரங்களில் ரேஷன் கடை திறக்காமல் இருப்பதாலும், நுகர்வோர்களின் நேரம் வீணாகச் செலவாகிறது.
இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வசதியை, அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 9773904050 என்ற எண்ணுக்கு ‘PDS 102‘ என டைப் செய்து SMS அனுப்பினால் போதும், ரேஷன் கடை திறந்திருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த பதில் கிடைக்கும்.
அதேபோல் மேற்கண்ட மொபைல் எண்ணுக்கு ‘PDS 101‘ என டைப் செய்து SMS அனுப்பினால், ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்த விவரங்களை, நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.