Work from home தருவதாக மோசடி:
இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மோசடி செய்யும் செயல்கள் அதிகரித்து வருகிறது. அப்படியொரு சம்பவம், தற்போது நவி மும்பை ஐரோலியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்துள்ளது. அதாவது மகப்பேறு விடுப்பு பெற்று, வீட்டில் இருந்த பெண், ஆன்லைன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக Work from home வேலை தேடி வந்தார்.
அப்படியாக, வீட்டில் இருந்தே Freelance வேலை தருவதாக, அப்பெண்ணிடம் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கேற்றார் போல் ஒரு சில எளிய பணிகளையும் வழங்கியிருந்தனர். பின்னர் மே 7 முதல் 10ஆம் தேதிக்குள் பல்வேறு கணக்குகளுக்கு ரூ.54.30 லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளார். இதன்பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதையடுத்து மும்பை சைபர் கிராம் போலீசாரிடம் புகார் செய்ததன் பேரில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வேலை, சலுகைகள் வழங்குவதாக வரும் விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.