வருகிற 2024 ஜூன் 1 முதல் வாகன ஓட்டிகளுக்கான டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில், புதிய விதி மாற்றம் அமலுக்கு வர உள்ளது.
டிரைவிங் லைசென்ஸ்:
சமீபகாலமாக வாகன ஓட்டிகளுக்கான லைசென்ஸ் பெறுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது RTO அலுவலகம் சென்று ஓட்டுநர் திறன் தேர்வு எழுத தேவையில்லை என அறிவித்துள்ளனர்.
அதற்கு மாறாக பயிற்சி பெறும் தனியார் பயிற்சி மையங்களிலே, ஓட்டுநர் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதி மாற்றம், வரும் 2024 ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
- இதற்கு, மத்திய அரசின் https://parivahan.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில், “ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பு (Driving Licence Apply)” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்வதோடு விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- இதன்பின் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO ) சமர்ப்பித்து, டிரைவிங் லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம்.