தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் திரைப்படம் திரையிடுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
சிறார் திரைப்படம்:

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு, சமூகப் பொறுப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படம் திரையிடுதல் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம் கலாச்சார தனித்தன்மை, ஒற்றுமை, பாலின சமத்துவம், நட்பு பாராட்டுதல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மட்டுமல்லாமல் மாணவர்களின் படைப்பாற்றலையும் வெளிக்கொண்டு வர இத்திரைப்படங்கள் வழி வகுக்கும்.
தற்போது, இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.