கனமழை:
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் விரைவாக நிரம்பி வருவதால் விவசாயிகள் உட்பட பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில், இன்று (ஜூலை 20) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.