தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர்:
நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற CSK vs MI போட்டி, ரசிகர்களிடையே மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இதற்கு முழுக்காரணமும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் சதம் தான்.
சமீபகாலமாக ஹர்திக், ரோஹித் இடையே சலசலப்பு ஏற்பட்டு வருவதாக ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏதாவது? நடக்கணும் என எதிர்பார்த்து வந்தனர்.
இதற்காகத்தான் என்னவோ? டெத் ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவின் 4 பந்துகளையும் தோனி பதம் பார்த்தார் என வட்டாரங்களில் பேசி வருகின்றனர். தோனியின் இந்த செயல் பலர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஷர்துல் தாக்கூர்-உம் ஓபன் டாக் அளித்துள்ளார்.
ஷர்துல் தாக்கூர் கூறுகையில், “மஹி பாய் பேட்டிங் செய்யும் போது, அவரின் ரசிகர் பட்டாளமும், அவரின் வலிமையும் இருக்கும் போது, எந்த பவுலருக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடுவார்.” என கூறி உள்ளார்.
opt-out