தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ATM மூலம் PF பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ATM மூலம் PF Withdrawal:
வருங்கால வைப்பு நிதியில் (PF) கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம், தொழிலாளர்கள் தங்களது PF கணக்கில் உள்ள பணத்தை விரைவாக எடுப்பது மட்டுமல்லாமல், எந்தவிதமான படிவங்களையும் பூர்த்தி செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
இத்திட்டம் 2025 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களுக்கான இடைவெளியில் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு EPFO-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கலாம் அல்லது அருகாமையில் உள்ள EPFO அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.