ஞாயிறு விடுமுறை:
நாடு முழுவதும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ஏன்? முதலாளிகள் பலரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் இந்த கிழமையில் ஷாப்பிங், விளையாட்டு, பார்ட்டி என்பது மட்டும் இல்லாமல் பலரும் நிம்மதியான ஓய்வு எடுப்பதற்கான நாளாகவும் திட்டமிடுகின்றனர்.
இப்படியான பெருமை கொண்ட ஞாயிற்றுக்கிழமையில், ஏன்? விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது பற்றி தெரியுமா? வாங்க பார்க்கலாம்…
அதாவது,
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் தேவாலயம் செல்வதற்காக, ஞாயிறு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.
ஆனாலும், இந்த விடுமுறை இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாராயண் மொகாஜி என்பவர் தொடர் போராட்டம் மேற்கொண்ட காரணத்தால், 1890 ஜூன் முதல் இந்தியர்களுக்கும் ஞாயிறு விடுமுறை வழங்கப்பட்டது.
பின்னர் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகும் கூட, ஞாயிறு விடுமுறை என்ற நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.