ஐபிஎல் பவர்பிளே வரலாறே மிரண்டது:
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் தெம்பூட்டும் விதமாக நேற்று (ஏப்ரல் 20) டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இரு பேட்டரும் ஒரு முடிவுடன் வந்தார்களா? அல்லது எதார்ச்சியாக நடைபெற்றதா? என தெரியவில்லை. டெல்லி பவுலர்களின் பந்துவீச்சை கிடைக்கும் பக்கமெல்லாம் வெளுத்து வாங்கினார்கள். ஸ்பின், பாஸ்ட் என பவுலர்கள் மாறி மாறி வந்தாலும் சிக்சர், பவுண்டரி மட்டுமே சென்று கொண்டு இருந்தது.
இதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் ஆறு ஓவர் எனும் பவர்பிளே ஓவரில் 125 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை பெற்றனர். இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா அணி அடித்த 105 ரன்கள் மட்டுமே அதிக ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.