ஜியோ 5ஜி பயனாளர்களுக்கு, புதிய அன்லிமிடெட் டேட்டா பூஸ்டர் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜியோ 5G:
இந்தியாவின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது 5g வாடிக்கையாளர்களுக்கு, ரூ.51 மற்றும் ரூ.101ல் புதிய அன்லிமிடெட் பூஸ்டர் டேட்டா பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
அதாவது,
- ரூ.51க்கான பூஸ்டர் பேக், தினமும் 1.5 ஜிபி என ஒரு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கும்,
- ரூ.101க்கான பூஸ்டர் பேக், தினமும் 1.5 ஜிபி என 2 மாதத்திற்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கும் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.