திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை:
திருச்சி மண்ணச்சநல்லூரில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நாளை (ஏப்ரல் 16) நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 16ஆம் தேதி (நாளை) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதேபோல் இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஜூன் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் கூறி உள்ளார்.