மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி:
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பின்னர் இதுவரையிலும் கட்டுமான பணிகள் நடைபெறாமல் தாமதமாகி வருவதால் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சனம் செய்து வந்தனர்.
இதையடுத்து கூடிய விரைவில் கட்டுமான பணிக்கான டெண்டர் கோரப்படும் என மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. அதன்பேரில் கடந்த மே 10ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.