மதுரையில் தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வரை மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (ஜூலை 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில்,
- பெரியார் நிலையம், செல்லூர் புதுப்பாலம் வழியாக அழகர் கோவில், மாட்டுத்தாவணி (M.G.R. பேருந்து நிலையம்) செல்லும் வாகனங்கள் MM லாட்ஜ். அரசன் பேக்கரி, கோகலே சாலை, IOC ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல்,
- மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் வாகனங்கள் K.K. நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை ரோடு, தத்தனேரி வழியாகவும்,
- நத்தம், அழகர்கோவில் ரோடு வழியாக ஆரப்பாளையம், பெரியார் செல்லும் கனரக மற்றும் வணிக வாகனங்கள் கோர்ட், .K.K. நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, பனகல் ரோடு, AV பாலம் வழியாகவும் செல்ல வேண்டும்.
மேலும்,
- நத்தம் ரோடு, அழகர்கோவில் சாலையில் இருந்து வரும் அரசு பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மட்டும் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு, North Gate, தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக AV பாலம் செல்லலாம்.
- டூ வீலர் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் தமுக்கம் சந்திப்பு, காந்தி மியூசியம் வழியாக வள்ளுவர் சிலையை அடையலாம்.