அக்னிவீர் திட்ட வேலைவாய்ப்பு:
இந்தியாவின் முப்படைகளில் காலியாக உள்ள வீரர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, “அக்னிவீர்” திட்டத்தின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது “அக்னிவீர் வாயு” எனும் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் வீரர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த அரிய வாய்ப்பை மதுரை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
தேர்வு குறித்த விவரங்களை காணலாம்:
விண்ணப்ப விநியோகம்:
- நாளை (ஜூலை 8) முதல் 28ஆம் தேதி வரை, https://agnipathvayu.cdac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விநியோகம் செய்ய உள்ளனர்.
தகுதிகள்:
- திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்திய குடிமகன்களாக இருக்க வேண்டும்.
- 03.07.2004 முதல் 03.01.2008 தேதி வரை பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
- 12 ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். (அ) பொறியியல் பாடங்களில் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து இருக்க வேண்டும்.
- இதுதவிர தேவையான உடல் தகுதி பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
- ஆன்லைன் தேர்வு (பொது அறிவு, ஆங்கிலம், கணிதம்)
- உடல் தகுதி தேர்வு
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு,
- மாதாந்திர ஊதியம் ரூ.30,000 வழங்கப்படும்.
- தொடர்ந்து நான்கு ஆண்டு பணி வழங்கப்படும்.
- சிறந்த வீரர்களுக்கு கூடுதலாக 4 ஆண்டுகள் பணி நீட்டிக்கப்படும்.
- இதுதவிர பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.