செல்வமகள் திட்டம்:
நாடு முழுவதும் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
அதில் ஒன்றாக, பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் எனும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் வரையிலும் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலும் 15 வருடங்களுக்கு தொகை சேமிக்கப்படும்.
குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்தவுடன், இத்திட்டம் முதிர்ச்சியடைந்துவிடுவதோடு, சேமிக்கப்படும் தொகைக்கு 8.2 சதவீத வட்டியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்ட வழிகாட்டுதலில் சில மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது,
- ஒரே விவரங்களுடன் கூடிய 2 செல்வமகள் கணக்குகள் இருந்தால், அந்த கணக்கு உடனடியாக மூடப்படும்.
- பெண் குழந்தைகளது தாத்தா அல்லது பாட்டி கணக்கை திறந்திருந்தால், பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்ற வேண்டும்.
- குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேகரித்து இணைக்க வேண்டும் என தபால் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மேலும், ஒழுங்கற்ற மற்றும் நெறிமுறையற்ற செல்வமகள் திட்ட கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரம், மத்திய நிதி அமைச்சகத்திடம் மட்டுமே இருக்கும் எனவும் புதிய வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளனர்.