பி.எப். கணக்கில் இருந்து தொகை மற்றும் பென்ஷன் பணத்தை, ஊழியர்கள் எடுப்பதற்கான சில வரைமுறைகளை EPFO நிறுவனம் வரையறுத்துள்ளது.
பி.எப். கணக்கு:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் நலன் கருதி வருங்கால வைப்புத் தொகை (PF), அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
அப்படி பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு நிகரான தொகையை நிறுவனம் வழங்குவதுடன் EPFO மூலம் பென்ஷன் தொகையும் கிடைக்கிறது.
இந்த தொகையை நிறுவனங்களில் இருந்து ஒய்வு பெறும் போது அல்லது ஏதேனும் அவசர கால சூழலில் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அதன்படி, எந்தெந்த காரணங்களுக்கு எவ்வளவு தொகை எடுக்கலாம்? என்பதற்கான விவரத்தைக் காண்போம்.
அதாவது,
- ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுகள் முன்னதாக 90 சதவீத பி.எப். தொகையை பெறலாம்.
- ஓய்வு பெற்ற பிறகு, முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.
- மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டால், ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 மடங்கு அல்லது மொத்த டெபாசிட்+வட்டி, இதில் எது குறைவோ அந்த தொகை PF கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு மாதத்திற்கு மேலாக வேலை இல்லாமல் இருப்பின் 75 சதவீத தொகையையும், கூடுதலாக 2 மாதங்கள் தொடர்ந்து வேலையில்லாமல் இருப்பின் மீதமுள்ள 25 சதவீத தொகையையும், PF கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
- நிலம் வாங்க, வீட்டு கடன் அடைக்க, வீடு கட்ட அல்லது புதுப்பிப்பதற்காக PF தொகையை பெறலாம். ஆனால் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
- குழந்தைகளின் கல்விச் செலவுக்காக 50 சதவீத தொகையை பெறலாம்.
- ஊழியர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் திருமண நிகழ்ச்சிக்காக 50 சதவீத தொகையை பெறலாம். ஆனால் PF கணக்கு தொடங்கி 7 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும் என வரையறுத்துள்ளனர்.