பி.எம்.கிசான் திட்டத்தின் 17வது தவணைக்கான கோப்பில் பிரதமர் கையெழுத்திட்டுள்ளதால், ரூ.2,000 இந்த தேதியில் வரவு வைக்கப்படலாம்.
பி.எம்.கிசான் திட்டம்:
நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகையை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்த உதவித்தொகையின் 16 வது தவணை, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
ஜூன் மாதத்திற்கான கலைஞர் மகளிர் ரூ.1,000 உரிமைத் தொகை., இவர்களுக்கு மட்டும் தான்? முக்கிய தகவல்!!!
இதைத்தொடர்ந்து 17வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில், பிரதமர் மோடி அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இம்மாத (ஜூன்) இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் 17 வது தவணை ரூ.2,000 வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.