விசிக திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்தான கேள்விக்கு செய்தியாளர்களின் பாமக அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
மது ஒழிப்பு மாநாடு:
தமிழகத்தில் மது விற்பனையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மது ஒழிப்பை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை அரசியல் கட்சி தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தை கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் அவர்கள், மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அன்புமணி அவர்கள்,
- “எங்கள் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இருந்தே பல்வேறு மது ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அப்படிப் பார்த்தால் மது ஒழிப்பில் பாமக Ph.d., முடித்துள்ளது. விசிக இப்போதுதான் LKG வந்துள்ளது. மது ஒழிப்பு தொடர்பான அனைத்து போராட்டங்களிலும் பாமக பங்கேற்கும். அந்த வகையில், விசிக-வின் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்காமல் இருந்தாலும் நாங்கள் பங்கேற்போம்.
- அதேபோல், பாமக ஜாதி கட்சி போன்ற சொற்களால் திருமாவளவன் இழிவுபடுத்தி வருகிறார். பாமக ஜாதி கட்சி இல்லை, சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட கட்சி. எனவே, பாமகவை இழிவுபடுத்துவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என எச்சரிக்கை விடுப்பது போலவும் பதில் அளித்துள்ளார்.