சர்க்கரை நோய், BP மாத்திரைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாத்திரைகளின் விலை உயர்வு:
சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விற்பனை விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சுகர், BP உட்பட 54 வகை நோய்க்கான மாத்திரைகளின் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- Blood Pressure (BP) நோய்க்கான சில்னி டிஃபைன், டெல்மிசார்டன் போன்ற மாத்திரைகளின் விலை ரூ.7.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- சர்க்கரை நோய்க்கான லினாக்லிப்டின், மெட்ஃபார்மின் ஆகிய மாத்திரைகளின் விற்பனை விலை ரூ.15 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அதேபோல் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஊசி ஆகிய 3 மாத்திரைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.