புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு உட்பட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டு பெரும் பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கையில் புதிதாக திருமணம் செய்தவர்கள், புதிய ரேஷன் கார்டு பெறுவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.
அப்படி விண்ணப்பிக்க வேண்டுமெனில், அதற்கு முன்னதாக தம்பதிகள் இருவரின் பெயரும் பழைய ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். அதேபோல் ஆதார் கார்டில் உள்ள முகவரியில் தான் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை பார்க்கலாம்.
புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க,
- https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
- மின்னணு அட்டை தொடர்பான சேவைகளுக்கு கீழே ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- திரையில் தோன்றும் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்வதோடு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பின்னர் மொபைல் எண் வெரிஃபிகேஷன் முடிந்தவுடன், உங்களது விண்ணப்பம் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.