பான் கார்டுடன் ஆதார் எண் ஆன்லைன் மூலம் இணைக்கணுமா?
வங்கிகளில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பான் கார்டு கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நிதி மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும் உதவுகிறது. இத்தகைய சூழலில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கான கால அவகாசமும் மே 31 ஆம் தேதி வரையிலும் வழங்கி உள்ளனர்.
மே 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செயலிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுவரை இப்பணியை மேற்கொள்ளாதவர்கள், உடனடியாக https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற முகவரியில் சென்று ‘Link Aadhaar’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் மிகவும் சுலபமாக செய்து முடித்துக் கொள்ளுங்கள்.