கோடக் மஹிந்திரா வங்கிக்கு RBI விதித்த கட்டுப்பாடு:
இந்தியாவில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து வருகிறது. அப்படி கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கைகளையும் RBI மேற்கொள்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் விதிகளை மீறியதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பல்வேறு தடை உத்தரவை, ரிசர்வ் வங்கி பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் வங்கி சேவை விதிகளை மீறியதற்காக கோடக் மஹிந்திரா வங்கிக்கு முக்கிய தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் ஆன்லைனில் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும், கடன் அட்டைகளை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஆனாலும் மற்ற சேவைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.