இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI), 90 ஆண்டுகால செயல்பாடுகளை கொண்டாடுவதற்காக கல்லூரி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
RBI-யின் வினாடி-வினா:
இந்திய அரசின் நிதி அமைச்சகத்திற்கு முக்கிய பங்காற்றி வருவது தான் இந்திய ரிசர்வ் வங்கி(RBI).
1935 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வங்கியின், 90 ஆண்டு கால செயல்பாடுகளை கொண்டாடும் விதமாக RBI சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது, இந்திய அளவில் கல்லூரி பயின்று வரும் இளங்கலை மாணவர்களுக்கு இடையே RBI தொடர்பான வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.
தேசிய அளவில் நடைபெற இருக்கும் இப்போட்டியில் இறுதிச்சுற்று, மண்டல சுற்று மற்றும் மாநில சுற்று என மூன்று பிரிவுகளின் கீழ் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் RBI அறிமுகப்படுத்தியுள்ள https://www.rbi90quiz.in/ என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.