இந்திய அஞ்சல் துறையில் பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் (BPM), டக் சேவக் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 21,413 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ததோடு மதிப்பெண் போன்ற குறிப்பிட்ட சில தகுதிகளை மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தேர்வுகள் எதுவும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனைய தகுதிகள்:
- கணினி பற்றிய அறிவு
- சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- உள்ளூர் மொழியில் பயின்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்,
- SC/ST, OBC, மாற்றுத்திறனாளி போன்றோர்களுக்கு வயது தளர்வுகளும் உண்டு.
விண்ணப்பம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள், 2025 மார்ச் 3ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ரூ.100 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் /எஸ்.சி /எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
கூடுதல் விவரங்களுக்கு Click Here…