ரயில்வே துறையில் 32,438 காலிப்பணியிடங்கள்., RRB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இந்திய ரயில்வேயின் பல்வேறு துறைகளில் உள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது.

லெவல்-1 "குரூப் D" :

இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை ‘ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)‘ வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது இந்திய ரயில்வே துறையில் லெவல்-1 “குரூப் D” பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் விவரம்:

  • தடப் பராமரிப்பாளர் Gr. IV – 13,187
  • உதவியாளர் P-Way – 247
  • உதவியாளர் (C&W) – 2587
  • பாய்ண்ட்ஸ்மேன்-B – 5058
  • உதவியாளர் (Track Machine) – 799
  • உதவியாளர் (Bridge) – 301
  • உதவி TRD – 1381
  • உதவியாளர் (S&T) – 2012
  • உதவியாளர் TL & AC – 1041
  • உதவி TL & AC (Workshop) – 624
  • உதவியாளர் (Workshop) (Mech) – 3077
  • உதவியாளர் லோகோ ஷெட் (Diesel) – 420
  • உதவியாளர் லோகோ ஷெட் (Electrical) – 950
  • உதவி செயல்பாடுகள் (Electrical) – 744 என மொத்தமாக 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 2025 ஜன.1-இன் படி குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 36க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதிகள் உடையவர்கள் இன்று (ஜன.23) முதல் பிப்.22ஆம் தேதி வரை https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • கணினி அடிப்படையிலான சோதனை தேர்வு (CBT)
  • உடல் திறன் சோதனை (PET)
  • மருத்துவ பரிசோதனை (ME)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (DV)

கணினி அடிப்படையிலான சோதனை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கே ஏனைய தேர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடத்திட்டம்:

  • பொது அறிவியல் – 25 மதிப்பெண்கள்
  • கணிதம் – 25 மதிப்பெண்கள்
  • பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு – 30 மதிப்பெண்கள்
  • பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் – 20 மதிப்பெண்கள்

கூடுதல் விவரங்களுக்கு...

Subscribe to our newsletter and stay updated.!

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top