தமிழ்நாட்டில் கனமழைக்கான அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கனமழை எச்சரிக்கை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று வருவதால், இன்று (அக்.15) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, நாளை (அக்.16) ரெட் அலர்ட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் மாவட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.