திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஏ/சி ரூம் மற்றும் டிஜிட்டல் லாக்கர் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு ஏ/சி ரூம்:
ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில். தற்போது திருச்சி ரயில் நிலையத்தில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் மற்றும் டிஜிட்டல் லாக்கர் வசதியைஅறிமுகம் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில்,
- நவீன ஏ/சி தங்குமிட வசதியை, ரூ.30 கட்டணம் செலுத்தி ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ரூ.15 கட்டணம் செலுத்தி டிஜிட்டல் லாக்கர் வசதியை, 3 மணி நேரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- இந்த வசதிகளை கைபேசியின் OTP வழியே திறக்க முடியும். அதேபோல் இன்னும் பல்வேறு வசதிகள், இதில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.