தெற்கு ரயில்வே ஆனது, தாம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு இடையிலான சிறப்பு ரயில் சேவையை மூன்று மாதங்களுக்கு நீட்டியுள்ளது.
தெற்கு ரயில்வே:
பொதுவாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை போன்ற விடுமுறை காலங்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
எனவே, அவர்களின் பயணம் சிரமமின்றி அமையும் விதமாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை மத்திய மாநில அரசுகள் இயக்கி வருகிறது.
அந்த வகையில், கடந்த கோடை கால விடுமுறையையொட்டி தாம்பரம் to நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலின் காலக்கெடு முடிவடைய உள்ளதாக இருந்தது.
இதனால் பயணிகள் பலரும் கவலை தெரிவித்து வந்த நிலையில், தற்போது சிறப்பு ரயில் சேவை கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி,
- இன்னும் 3 (2024 நவம்பர்) மாதங்களுக்கு நாகர்கோவிலில் (புறப்படும் நேரம் இரவு 11:15) இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும்,
- மறுமார்க்கமாக தாம்பரத்தில் (புறப்படும் நேரம் பிற்பகல் 3:30) இருந்து நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.