வங்கக்கடலில் “புயல் சின்னம்”:
நேற்று முன்தினம் (மே 19) அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், விரைவில் தமிழ்நாடு, கேரளா கடற்பகுதியை நெருங்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில், நாளை (மே 22) காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. இது மண்டலமாக வலுப்பெற்று புயல் சின்னமாக உருவாகும் என எதிர்பார்த்து உள்ளனர்.
இதனால் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே 24 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீன்பிடிக்க சென்றவர்களும், நாளை மறுநாளுக்குள் (மே 23) கரை திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளனர். மேலும் தென் தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நாளை மறுநாள் (மே 23) வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.