அகவிலைப்படி உயர்வு பலன் எப்போது?
தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பலன் 2024 ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்கப்படும். அதேபோல் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான நிலுவை தொகை ஏப்ரல் 2வது வாரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையில் களஞ்சியம் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பலருக்கும் அகவிலைப்படி நிலுவை தொகை வரவு வைப்பதில் தாமதம் ஏற்படலாம் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு பலன் எப்போது? கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.