மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு:
பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிய நிலையில் பல்வேறு கல்லூரிகளிலும் பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது விண்ணப்பங்கள் வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மே 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்குவதற்கான கால அவகாசம், மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.