திருவண்ணாமலை சிறப்பு பேருந்து:
திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் கோவிலில், பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில், கிரிவலம் செல்வதற்கு எண்ணற்ற பக்தர்கள் வருவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு இந்நாட்களில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது.
அந்த வகையில் நாளை (மே 23) வைகாசி மாத பௌர்ணமி என்பதால், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 585 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு கிரிவலம் செல்லும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பது உறுதி.