டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
TNPSC குரூப் 1:
தமிழ்நாடு அரசின் 90 குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் அறிவித்துள்ளது. இதன் பிரிலிம்ஸ் தேர்வு, வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளதால், பலரும் தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த தேர்வர்கள் உட்பட பலரும் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில்,
- செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- இந்த மையத்தில் திறமை படைத்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுவதுடன் இலவச WIFI வசதி, நூலக வசதி போன்ற வசதிகளும் உள்ளது.
- பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.