TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), 6,244 காலிப் பணியிடங்களுக்கான ‘குரூப் 4′ எழுத்துத் தேர்வு ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் 2024 பிப்ரவரி 28ஆம் தேதி வரை வரவேற்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் எழுத்துத் தேர்வு வருகிற ஜூன் 9 ஆம் தேதியில் நடைபெற இருப்பதால், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியிடப்படும். அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.