கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
TNSTC சிறப்பு பேருந்துகள்:
தமிழ்நாட்டில் மக்களின் பொது போக்குவரத்து சேவையை எளிமையாக்கும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த வகையில், நாளை (ஆக.24 (சனி)), நாளை மறுநாள் (ஆக.25 (ஞாயிறு)) மற்றும் கிருஷ்ண ஜெயந்தி (ஆக.26(திங்கள்)) என தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 23 & 24 ஆகிய இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களுக்கு 485 பேருந்துகளும், ஆகஸ்ட் 25 & 26 ஆகிய இரண்டு நாட்கள் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
இதன்மூலம் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.