அரசு கூட்டுறவு காய்கறி கடைகளில் தக்காளி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
விலை உயர்வு:
கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விற்பனை விலை ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் உயர்ந்துள்ளதால் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அரசு கூட்டுறவு காய்கறி கடைகளில், தக்காளி கிலோ ரூ.38 என ஒருவருக்கு 2 கிலோ வழங்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.