2024 ஆம் ஆண்டின் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைக்கான தொடர் விடுமுறையை முன்னிட்டு, ரயில் முன்பதிவுகள் இன்று (ஜூன் 11) முதல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரயில் முன்பதிவுகள்:
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நேரங்களில் பல்வேறு ரயில்களிலும் முன்பதிவு சீக்கிரமாக தீர்ந்து விடுகிறது.
இதன் காரணமாக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் பயணங்களுக்கான முன்பதிவை, ரயில்வே நிர்வாகம் தொடங்குகிறது.
அந்த வகையில், நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை வருகிற அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் வர உள்ளது. இந்நிலையில் இந்த பண்டிகைகளுக்கான முன்பதிவு தொடங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் பயணத் தேதிகளுக்கான முன்பதிவு தொடங்கும் தேதி மற்றும் நேரம், கீழே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.
பயணத் தேதி |
கிழமை |
முன்பதிவு தொடங்கும் தேதி & நேரம் |
09.10.2024 | புதன் | 11.06.2024 & 08.00 a.m. |
10.10.2024 | வியாழன் | 12.06.2024 & 08.00 a.m. |
11.10.2024 | வெள்ளி (ஆயுத பூஜை) | 13.06.2024 & 08.00 a.m. |
12.10.2024 | சனி (விஜயதசமி) | 14.06.2024 & 08.00 a.m. |
13.10.2024 | ஞாயிறு | 15.06.2024 & 08.00 a.m. |
14.10.2024 | திங்கள் | 16.06.2024 & 08.00 a.m. |
15.10.2024 | செவ்வாய் | 17.06.2024 & 08.00 a.m. |
ஆனாலும், வட இந்தியாவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு, வழக்கமாக இயங்கும் ரயில்களுக்கான முன்பதிவு தேதியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.