தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், இன்று (ஆகஸ்ட் 22) தனது கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்துள்ளார்.
த.வெ.க. கொடி மற்றும் பாடல்:
2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) எனும் கட்சியை அறிமுகம் செய்தார்.
இதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 22) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க. கட்சிக்கான கொடி மற்றும் பாடலை, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
அப்போது பேசிய தலைவர் விஜய், “இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழ்நாடு மக்களுக்காக உழைப்போம்.” என சூளுரைத்ததோடு கட்சிக் கொடிக்கான விளக்கம் மற்றும் வரலாறு குறித்த விவரத்தை மாநாட்டில் அறிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
த. வெ. க. கட்சியின் கொடியானது அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும், கொடியின் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலர், அதனை சுற்றி 28 நட்சத்திரம் மற்றும் அதன் பக்கங்களில் இரு போர் யானைகள் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.