இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களை சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயலகத் தமிழர் நலத்துறை:
தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் நலன் கருதி அயலகத் தமிழர் நலத்துறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்கு, பல விழிப்புணர்வு செய்திகள் பகிரப்படுவதுடன் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நல வாரியம்., தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
அந்த வகையில், தற்போது முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப வேலைக்காக தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு, தமிழ்நாட்டு இளைஞர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
அப்படி செல்வோர்கள் பலருக்கும், அங்கு சட்டவிரோதமான வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப்படுவதாக இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக இதுபோன்ற மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, விசாவின் உண்மைத்தன்மை, பணி ஒப்பந்தம் குறித்த விவரங்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு 9042149222, 18003093793 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு சரி பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.