பேடிஎம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆண் பணியாளர்களை விட அதிக ஊதியத் தொகை வழங்கப்படுவதாக ஆண்டறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பெண்களின் ஊதிய உயர்வு:
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களிலும், தொழில் ரீதியாகவும் ஊதிய ரீதியாகவும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர்.
அப்படி இந்தியாவில் செயல்பட்டு வரும் பேடிஎம், மாமா எர்த், சொமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஊதியம் வாங்கியதாக, அந்த நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பேடிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், ஆண்களை விட 160 சதவீதம் அதிகமாக ஊதியம் வாங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், 2024 ஆம் ஆண்டில் நைக்கா உள்ளிட்ட பல டெக் நிறுவனங்களில் ஆண்களை விட 27 சதவீதம் குறைவாகவே பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.