பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரவு நேரங்களில் இலவச பயண திட்டத்தை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம்:
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும், கடந்த சில வாரங்களாக பாலியல் ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை இலவச ஹெல்ப்லைன் அழைப்பை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், இரவு நேரங்களில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் பெண்களை, அவர்களது வீட்டிற்கு காவல்துறையின் PCR/SHO வாகனத்தில் இலவசமாக அழைத்து செல்லப்படும்.
இந்த வசதியை பெறுவதற்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், 1091 மற்றும் 7837018555 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.